ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.;
image courtesy; PTI
லண்டன்,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த முறை ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹாரி புரூக் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஜோ ரூட், மார்க் வுட், வில் ஜேக்ஸ், மேத்யூ பாட்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக் (துணை கேப்டன்), பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்.