ஆசிய கோப்பை: பும்ரா பந்துவீச்சில் அந்த பாக்.வீரர் 6 சிக்சர்கள் விளாசுவார் - தன்வீர் அகமது

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-09-13 15:58 IST

லாகூர்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்சத்திர வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே கூறிவருகின்றனர்.

இந்த போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான தன்வீர் அகமது இந்த போட்டி குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது பின்வருமாறு:- “இந்த ஆசிய கோப்பை போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சைம் அயூப் ஆறு சிக்சர்கள் அடிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்