ஆசிய கோப்பை கிரிக்கெட்: யுஏஇ அணி அறிவிப்பு

யுஏஇ அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது.;

Update:2025-09-05 14:13 IST

image courtesy:ICC

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான யுஏஇ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது வாசீம் தலைமையிலான அந்த அணியில் ஆசிப் கான், ஹேய்டர் அலி, ஜுனைத் சித்திக் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

யுஏஇ அணி விவரம் பின்வருமாறு:-

முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹேய்டர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது பாரூக், முஹம்மது ஜவதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.

யுஏஇ அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்