ஆசிய கோப்பை: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.;
துபாய்,
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சையிம் ஆயுப், பர்ஹான் களமிறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் சையிம் ஆயுப் (0 ரன்) கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதையடுத்து முகமது ஹாரிஸ் களமிறங்கினார்.
2வது ஓவரை பும்ரா வீசினார். 3 ரன்கள் எடுத்திருந்த முகமது 1.2 ஓவரில் பும்ரா பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி 2 ஓவரில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. பர்ஹான் 2 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். பாண்ட்யா, பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.