ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு

சூப்பர்4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதுகின்றன.;

Update:2025-09-20 19:40 IST

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

சூப்பர்4 சுற்று இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்