கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசான் வாரியர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 1 ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.;

Update:2025-09-18 09:32 IST

image courtesy:twitter/@amznwarriors

கயானா,

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று 1 ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கயானா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பென் மெக்டெர்மாட் (34 ரன்கள்), சாம்ப்சன் (17 ரன்கள்) ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருப்பினும் பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷாய் ஹோப் (32 ரன்கள்) மற்றும் ரோமரியோ ஷெப்பர்டு (21 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் 19.5 ஓவர்கள் விளையாடிய கயானா 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. லூசியா கிங்ஸ் தரப்பில் ஷம்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertising
Advertising

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே கயானா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் காரி பியர் (50 ரன்கள்), தைமல் மில்ஸ் (30 ரன்கள்) போராடியும் பலனில்லை. முடிவில் 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த லூசியா கிங்ஸ் 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. கயானா தரப்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய குடகேஷ் மோட்டி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தோல்வியடைந்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி 20-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Tags:    

மேலும் செய்திகள்