சாம்பியன்ஸ் டிராபி: ஒரு அணியின் அதிகபட்ச ரன்.. வரலாறு படைத்த நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது.;

Update:2025-03-06 11:17 IST

image courtesy:twitter/@ICC

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்னர் நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 356 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள நியூசிலாந்து புதிய சாதனை படைத்துள்ளது.

பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்டெ்டுக்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 100 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


Tags:    

மேலும் செய்திகள்