கிறிஸ் கெயில் தேர்வு செய்த ஆல் டைம் ஐ.பி.எல். பிளேயிங் லெவன்.. வெற்றிகரமான கேப்டனுக்கு இடமில்லை
கிறிஸ் கெயில் தேர்வு செய்த அணியில் 4 சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.;
கயானா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வீறுநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். பிளேயிங் லெவனை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான கிறிஸ் கெயில் தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் தோனி, ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய 4 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதுபோக ஆர்சிபி அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரையும் அணியில் தேர்வு செய்துள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்யாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ் கெயில் தேர்வு ஆல் டைம் ஐ.பி.எல். பிளேயிங் லெவன்: கிறிஸ் கெயில், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஏபி டி வில்லியர்ஸ், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, பிராவோ, சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.