டேரில் மிட்சேல் சதம்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது.;
வெல்லிங்டன்,
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், டி20 தொடரை 3-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே , டேரில் மிட்சேல், பிரேஸ்வெல் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக விளையாடிய மிட்சேல் சதமடித்து அசத்தினார். அவர் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கான்வே 49 ரன்களும் , பிரேஸ்வெல் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 270 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.