தோனி, ரோகித் இல்லை.. பிடித்த வீரர் யார்..? சேவாக்கின் மகன் பதில்

சேவாக்கின் மகன் தற்போது டெல்லி பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.;

Update:2025-08-26 17:30 IST

image courtesy:PTI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் இவருக்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். சேவாக் ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறன் கொண்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர்.

இதனையடுத்து சேவாக் தனது மகன் ஆர்யவீரை கிரிக்கெட் வீரராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே ஆர்யவீர் டெல்லி உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். தற்போது அவர் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரை ரூ. 8 லட்சத்திற்கு டெல்லி கிங்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆர்யவீரிடம் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ரோகித் சர்மாவை விடவும் தோனியை பிடிக்கும். ஆனால் தோனியை விட சுப்மன் கில்லை பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

இறுதியில் சுப்மன் கில் அல்லது விராட் கோலி ஆகியோரில் யாரை பிடிக்கும்? என கேள்வி கேட்கப்பட, அதற்கு ஆர்யவீர், விராட் கோலி என பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்