தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த இந்திய டி20 அணி.. தமிழக வீரருக்கு இடம்
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை.;
சென்னை,
இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட தம்முடைய ஆல் டைம் சிறந்த அணியை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது அணியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த் சுரேஷ் ரெய்னாவை அவர் தேர்வு செய்யவில்லை.
அதேபோல் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் அபிஷேக் சர்மாவை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவையும், 3-வது வரிசையில் விராட் கோலியையும் அவர் தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் தனது அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார். அத்துடன் அந்த அணியில் முழு நேர சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த இந்திய டி20 அணி:
தோனி (கேப்டன்), ரோகித் சர்மா, அபிஷேக் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், வருண் சகரவர்த்தி.