துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன.;
image courtesy: TNCA twitter
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி சுற்று முடிவில் மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதன் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இதில் தெற்கு- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றிருந்த ஜெகதீசன் மற்றும் படிக்கல் ஆகியோர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். இதன் காரணமாக இருவரும் துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தவற விடுகின்றனர்.
இந்த சூழலில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக தமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் கர்நாடகாவின் ஸ்மரண் ரவிச்சந்திரன் ஆகியோர் தெற்கு மண்டல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் ரிக்கி புய் புதிய துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல அணி விவரம்: அசாருதீன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரிக்கி புய் (துணை கேப்டன்), ஸ்மரன் ரவிச்சந்திரன், காலே எம், ஷேக் ரஷீத், தன்மய் அகர்வால், சல்மான் நிசார், ஆண்ட்ரே சித்தார்த், தனய் தியாகராஜன், குர்ஜப்னீத் சிங், நிதிஷ், கௌசிக் வி, அங்கித் சர்மா, டி விஜய், பாசில் என்.பி.