இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் டி20: மழை காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 153 ரன்கள் அடித்தது.;

Update:2025-10-18 23:50 IST

image courtesy:twitter/@englandcricket

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ர நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாம் கரன் 49 ரன்கள் அடித்தார்.

பின்னர் 154 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கும் தருவாயில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்க நீண்ட நேரம் ஆனதால் இந்த ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது 16.2-வது ஓவரின் போதும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 20-ம் தேதி நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்