இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: ஆஸி. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்
இந்தியா- ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
கான்பெர்ரா,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா விலகி இருக்கிறார். அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளார். ஆடம் ஜம்பாவுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.