2வது டெஸ்ட்டுக்கு முன் இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க கம்பீர் முடிவு
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நாளை (8-ந் தேதி) இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அனைவரையும் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார்.