சச்சின் முதல் டெஸ்ட் சதம் அடிக்க நான்தான் காரணம் - இங்கிலாந்து முன்னாள் வீரர் நகைச்சுவை

சச்சின் தெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் சதத்தை இங்கிலாந்தில் பதிவு செய்தார்.;

Update:2025-06-30 11:49 IST

image courtesy:PTI

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக சதங்கள் (100) அடித்த வீரராக உள்ளார். இந்திய அணிக்காக 1989-2013-ம் ஆண்டு வரை விளையாடிய அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் 51 சதங்கள் அடித்துள்ளார். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை 1990-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பதிவு செய்தார்.

இந்நிலையில் முதல் முறையாக இங்கிலாந்தில் சச்சின் முதல் முறையாக சதம் அடித்ததற்கு காரணம் தான் தவற விட்ட கேட்ச்தான் காரணம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஆலன் லம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சச்சினுக்கு 18 வயதாக இருந்தபோது நான் அவருக்கு எதிராக விளையாடினேன். அப்போது அவர் கொடுத்த கேட்சை நான்தான் ஸ்லிப் திசையில் இருந்து தவறவிட்டேன். அதனை பயன்படுத்தி அவர் அந்த போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் நான் சச்சினை எப்போது பார்த்தாலும், 'உங்களுடைய முதல் டெஸ்ட் சதம் இங்கிலாந்தில் பதிவானதற்கு நான்தான் காரணம் என அவரிடம் கூறிக் கொண்டே இருப்பேன்' என்று கூறி சிரித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்