இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: ஒன்றாக புகைப்படம் எடுத்த வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.;

Update:2025-10-17 22:56 IST

image courtesy:BCCI

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.

அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இருவரும் ஏறக்குறைய 7 மாதம் கழித்து மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருடன் இந்திய வீரர்களான நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜூரெல் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். இது வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்