மகளிர் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.;

Update:2025-07-10 03:26 IST

மான்செஸ்டர்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், ஏற்கனவே நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சோபியா அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 17 ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்த 127 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்