ஐ.பி.எல்.2026: சிஎஸ்கே அணியில் இணையும் தமிழக ஆல் ரவுண்டர்..? வெளியான தகவல்
இவர் கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.;
image courtesy:PTI
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
இந்த சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அடுத்த சீசனுக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முன்னணி ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் செய்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட ரூ.3.2 கோடிக்கே அவரை சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்ய குஜராத் அணி நிவாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.