இளையோர் 2வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 229/7

இந்தியா தரப்பில் ஆதித்யா ராவத், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், நமன் புஷ்பக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்;

Update:2025-07-21 12:30 IST

image courtesy:BCCI

செல்ம்ஸ்போர்டு,

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செல்ம்ஸ்போர்டில் நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பென் டாக்கின்ஸ் மற்றும் ஆடம் தாமஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களம் புகுந்த ஆர்யன் சாவந்த் 20 ரன், ராக்கி பிளின்டாப் 16 ரன், பென் மேயஸ் 31 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

தொடர்ந்து தாமஸ் ரியூ மற்றும் ஏகான்ஷ் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் தாமஸ் ரியூ 59 ரன்னிலும், ரால்பி ஆல்பர்ட் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 62 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஏகான்ஷ் சிங் 66 ரன்னுடனும், ஜேம்ஸ் மின்டோ 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆதித்யா ராவத், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், நமன் புஷ்பக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இன்றூ 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்