ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலியின் சாதனை மகத்தானது ஆனால்... - ரவிசாஸ்திரி எச்சரிக்கை

கோலி தனது முழு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ரன் குவிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.;

Update:2025-10-25 09:43 IST

கோப்புப்படம்

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவ்வாறு விளையாடினால் அவரால் எப்படி 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆட முடியும் என்ற விவாதம் கிளம்பி இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘விராட் கோலி விரைவாக பார்முக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பிடிக்க கடும் போட்டி (ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர்) நிலவுகிறது. அதனால் கோலியோ அல்லது ரோகித் சர்மாவோ யாராக இருந்தாலும் அணியில் தனக்கான இடம் உறுதி என மெத்தனமாக இருக்க முடியாது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலியின் சாதனை மகத்தானது. தொடர்ந்து இரு டக்-அவுட் ஆனதால் ஏமாற்றம் அடைந்து இருப்பார். அவர் சீக்கிரம் பழைய நிலைக்கு திரும்பா விட்டால் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைப்பது கடினமாகி விடும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்