கடைசி ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல்
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 105 பந்துகளில் சதமடித்து அசத்தினார் .;
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்கத்தில் கில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரோகித் சர்மா விராட் கோலி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.ஒருபுறம் கோலி நிதனமாக விளையாடினார் . மறுபுறம் ரோகித் சர்மா அதிரடி காட்டினார் . இருவரும் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 105 பந்துகளில் சதமடித்து அசத்தினார் .