லெஜெண்ட்ஸ் லீக்: கம்ரான் அக்மல் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 113 ரன்கள் குவித்தார்.;

Update:2025-07-27 14:20 IST

image courtesy:twitter/@WclLeague

லீட்ஸ்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கம்ரான் அக்மலின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 113 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டுவைன் ஸ்மித் 3 ரன்களிலும், கெயில் 5 ரன்களிலும், சிம்மன்ஸ் கோல்டன் டக் அவுட்டிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடியும் இலக்கை நெருங்க முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக சாத்விக் வால்டன் 42 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ரம்மான் ரயீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்