முகமது நபி அதிரடி... இலங்கைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
இன்றைய ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.;
அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி திணறியது. ஆனால் அணியின் அனுபவ வீரர் முகமது நபி அதிரடியில் மிரட்டினார். அவர் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் துஷாரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.