3வது டி20: வெஸ்ட் இண்டீசுக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
டெவான் கான்வே 56 ரன்கள் சேர்த்தார்;
வெல்லிங்டன்,
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் டெவான் கான்வே 56 ரன்களும், டேரல் மிச்சல் 41 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.