நிக் நைட் தேர்வு செய்த இந்தியா-இங்கிலாந்து சிறந்த டெஸ்ட் அணி... நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி 23-ம் தேதி தொடங்க உள்ளது.;
image courtesy:PTI
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இதனிடையே பலம் வாய்ந்த இரு அணிகள் விளையாடும் இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில முன்னாள் வீரர்கள் இந்தியா-இங்கிலாந்து அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஒருங்கிணைந்த அணியை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான நிக் நைட் தான் தேர்வு செய்த இந்தியா-இங்கிலாந்து ஒருங்கிணைந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார். அந்த அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோ ரூட் ஆகியோரை அவர் தேர்வு செய்யவில்லை.
நிக் நைட் தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:
அலஸ்டர் குக், வீரேந்தர் சேவாக், மைக்கேல் வாகன், சச்சின் தெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், கிரஹாம் தோர்பே, எம்எஸ் தோனி, ஜாகீர் கான், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அனில் கும்ப்ளே