சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாக்.முன்னணி வீரர் திடீர் ஓய்வு
இவர் பாகிஸ்தான் அணிக்காக 21 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.;
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆசிப் அலி (வயது 33) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகம் ஆன அவர் 58 டி20 மற்றும் 21 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
2021 டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற இவர் முக்கிய காரணமாக அமைந்தார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த ஆசிப் அலி 4 சிக்சர்கள் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார்.
கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஆடிய அவர் அதன்பின் அணியில் இடம்பெறவில்லை. இத்தகைய சூழலில் திடீரென அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் உள்நாட்டு போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.