சந்தித்த 2-வது பந்திலேயே பவுண்டரி அடித்த பண்ட்.. ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்சன் வைரல்
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;
லீட்ஸ்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும் 5-வது வரிசையில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். இதில் களமிறங்கிய முதல் பந்தை தடுத்து ஆடிய அவர், 2-வது பந்தை இறங்கி வந்து பந்துவீசிய பென் ஸ்டோக்சின் தலைக்கு மேலாக பவுண்டரி விளாசினார். இதனை கண்ட பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்டை பார்த்து சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.