போப் லிட்ச்பீல்ட் அபாரம்... இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 88 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-09-14 20:55 IST

Image Courtesy: X (Twitter) / File Image

சண்டிகர்,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கானட் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 281 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேஹன் ஸ்கட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 88 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்