ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் ரவீந்திர ஜடேஜா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நாளை தொடங்குகிறது.;
Image Courtesy: @BCCI
புதுடெல்லி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நாளை தொடங்குகிறது.
இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சவுராஷ்டிரா அணி தனது 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை ராஜ்கோட்டில் சந்திக்கிறது.