ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ளது.;

Update:2025-07-24 15:23 IST

image courtesy:ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதியும், 2-வது போட்டி 12-ம் தேதியும், கடைசி டி20 போட்டி 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒருநாள் போட்டிகள் முறையே ஆகஸ்ட் 19, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியின் கேப்டனாக மார்க்ரமும், ஒருநாள் அணியின் கேப்டனாக பவுமாவும் செயல்பட உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் பிரெனலன் சுப்ராயென் அறிமுக வீரராக 2 அணிகளிலும் (டி20 மற்றும் ஒருநாள்) இடம்பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

டி20 அணி: மார்க்ரம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், நந்த்ரே பர்கர், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கேல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென், ரஸ்ஸி வான் டெர் டுசென்

ஒருநாள் அணி: பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நாந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஜி, ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ், வியான் முல்டர், லுங்கி நிகிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென்.

Tags:    

மேலும் செய்திகள்