முதல் டி20: வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.;
பல்லகலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இலங்கை வென்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை, வங்காளதேசம் இடையேயான முதல் டி20 ஆட்டம் நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹசன் இமொன் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார்.
இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.
இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். வங்காளதேச தரப்பில் அந்த அணியின் முகமது சைபுதின், ஹசன் மிரஸ், ரிஷத் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.