2வது ஒருநாள் போட்டி: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்

பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.;

Update:2026-01-24 03:58 IST

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இலங்கை, இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற இலங்கை முனைப்புக்காட்டும் என்பதாலும், தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்து முனைப்பு காட்டும் என்பதாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்