டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.;
Image Courtesy: @ProteasMenCSA
கராச்சி,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது.
இந்நிலையில், டி20 தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 34 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 140 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 68 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.