டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 60 ரன் எடுத்தார்.;
Image Courtesy: X (Twitter) / File Image
கயானா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மான்க்கும் 3வது போட்டி இன்று நடந்தது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 74 ரன் எடுத்தார்.
இதையடுத்து 190 ரன் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.