டி20 கிரிக்கெட்: விராட், சூர்யகுமார் யாதவை முந்தி மாபெரும் சாதனை படைத்த சிக்கந்தர் ராசா

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகன் விருது வென்றார்.;

Update:2025-09-07 16:21 IST

image courtesy:twitter/@ZimCricketv

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகன் விருதை வெல்வது இது 17-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்களின் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவை (இருவரும் 16 முறை) பின்னுக்கு தள்ளி உள்ள ராசா தனி ஆளாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மலேசிய வீரர் விரந்தீப் சிங் (22 முறை) முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. விரந்தீப் சிங் - 22 முறை

2. சிக்கந்தர் ராசா - 17 முறை

3. விராட் கோலி / சூர்யகுமார் யாதவ் - 16 முறை

4. முகமது நபி/ ரோகித் சர்மா - 14 முறை 

Tags:    

மேலும் செய்திகள்