இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-வது நாளில் இங்கிலாந்து லயன்ஸ் 192 ரன்கள்

இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.;

Update:2025-06-08 08:58 IST

நார்த்தம்டான்,

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நார்த்தம்டானில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் ஹைன்ஸ் - பென் மெக்கின்னி களமிறங்கினர். இதில் மெக்கின்னி 12 ரன்களில் அன்ஷுல் கம்போஜ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கைகோர்த்த ஹைன்ஸ் - எமிலியோ கே வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இதில் ஹைன்ஸ் அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்களிலும், எமிலியோ கே 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து லயன்ஸ் 46 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. ஜோர்டான் காக்ஸ் 31 ரன்களுடனும், ஜேம்ஸ் ரெவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அன்ஷூல் கம்போஜ், துஷர் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்டியான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இன்னும் 156 ரன்கள் பின்தங்கி உள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்