வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸ்திரேலிய முன்னணி வீரர் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.;
கோப்புப்படம்
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகி தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டத்தாகவும், அந்த காயத்தில் இருந்து மீள சில காலம் ஆகும் என்பதாலும் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சீன் அபோட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.