டிஎன்பிஎல்: சேப்பாக் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்

174 ரன்கள் இலக்குடன் சேப்பாக் அணி விளையிடுகிறது.;

Update:2025-06-06 21:08 IST

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.இதில் கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது . அந்த அணியில் துஷார் ரேஜா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார் . பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடிய அவர் அரைசதமடித்து 79 ரன்கள் எடுத்தார். ரஞ்சன் 38 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  திருப்பூர் 173 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் சேப்பாக் அணி விளையிடுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்