2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை அணிகள் நாளை மோதல்
நாளைய ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக போராடும்.;
image courtesy: @TNPremierLeague
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
சேப்பாக் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரையும், நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியையும் வீழ்த்தி இருந்தன.
நாளைய ஆட்டத்தில் அந்த வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.