பிரான்சுக்கு எதிரான ஆக்கி; இந்திய 'ஏ' அணி தோல்வி

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.;

Update:2025-07-14 07:32 IST

கோப்புப்படம்

ஜன்ட்ஹோவன்,

இந்திய 'ஏ' ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவன் நகரில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோல்வியை தழுவியது. தொடச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்