ஜூனியர் மகளிர் ஆக்கி: பெல்ஜியத்தை வீழ்த்திய இந்தியா

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.;

Update:2025-06-14 07:00 IST

கோப்புப்படம் 

ஆன்ட்வெர்ப்,

இந்த ஆண்டு இறுதியில் சிலியில் நடைபெறும் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி, ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பெல்ஜியத்தை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்திய அணியில் சோனம் (4-வது நிமிடம்), லால்தன்துயாங்கி (32-வது நிமிடம்), கனிகா சிவாச் (51-வது நிமிடம்) கோலடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்