ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: பாகிஸ்தான் அணிக்கு பதிலாக ஓமன் சேர்ப்பு

24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.;

Update:2025-10-30 08:14 IST

லாசானே,

14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘பி’ பிரிவில் சிலி, இந்தியா, சுவிசர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றிருந்த இந்த போட்டியில் இருந்து கடந்த வாரம் விலகியது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்