தேசிய சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக அணி தோல்வி
மாநில அணிகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.;
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் (17 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 29 மாநில அணிகள் 'ஏ', 'பி', 'சி' என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் 'ஏ' டிவிசனில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 9-0 என்ற கோல் கணக்கில் டெல்லி பகுத்ராவை ஊதித்தள்ளியது. சண்டிகார் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மரட்டியத்தை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை பந்தாடியது. இன்னொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 1-4 என்ற கோல் கணக்கில் டாமன் அண்ட் டையூவிடம் தோல்வி அடைந்தது. டாமன் அணியில் ஷர்மா அங்கித், அர்ஜூன் தலா 2 கோல் அடித்தனர். தமிழகம் தரப்பில் பிரசன்னா கோல் திருப்பினார்.