புரோ ஆக்கி லீக்: இந்தியா - அர்ஜென்டினா அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய சுற்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-11 16:10 IST

ஆம்ஸ்டெல்வீன்,

9 அணிகள் இடையிலான 6-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்விய தழுவியிருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் மீண்டும் நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில்  தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும். 

Tags:    

மேலும் செய்திகள்