ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் வெள்ளி வென்றார்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.;

Update:2025-08-27 18:05 IST

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் 22 வயதான அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின் சூ லியான்போவன் தங்கத்தையும், கொரியாவின் லீ ஜேகியோன் வெண்கலத்தையும் வென்றனர். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீன வீராங்கனை யுஜி யாங் (458.8 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜப்பான் வீராங்கனை மிசாகி நோபதா (448.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷி சவுக்‌ஷி (402.8) 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னதாக இந்திய நட்சத்திர வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் தகுதி சுற்றில் 22-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்