ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: அணிகள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அசத்தல்
மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் மனு பாக்கர் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.;
image courtesy:PTI
ஷிம்கென்ட்,
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். சீன வீராங்கனைகள் யூயூ ஜாங் தங்கப்பதக்கமும், ஜியாருஜூயான் வெள்ளி பதக்கமும், வியட்நாமின் து வின்க் டிரின் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதன் அணிகள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங், சிம்ரன்பிரீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றது. சீனா தங்கப்பதக்கமும், தென்கொரியா வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றின.
இதன் ஜூனியர் மகளிர் பிரிவில் இந்திய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இறுதி சுற்றில் இந்தியாவின் பயல் காத்ரி, நாம்யா கபூர், தேஜஸ்வனி முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை கைப்பற்றினர். இதன் அணிகள் பிரிவில் தேஜஸ்வனி, பயல் காத்ரி உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.