டைமண்ட் லீக்: இறுதி சுற்று இன்று தொடக்கம்.. வெற்றியோடு நிறைவு செய்வாரா நீரஜ் சோப்ரா..?
இறுதி சுற்றில் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.;
image courtesy:PTI
சூரிச்
டைமண்ட் லீக் கோப்பைக்கான இறுதி சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடக்கிறது. இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்குகிறார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அவர் வெற்றியோடு நிறைவு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் அவருக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஏனெனில் இறுதி சுற்றில் அவருடன் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.