மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் ஸ்ரீகாந்த், டாமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) சந்தித்தார்.;

Update:2025-05-24 07:14 IST

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், டாமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) சந்தித்தார்.

இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் டாமா போபோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஒரு ஆண்டில் ஸ்ரீகாந்த் அரைஇறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும். ஸ்ரீகாந்த் அடுத்து யுஷி தனகாவை (ஜப்பான்) எதிர்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்