டேபிள் டென்னிசில் ஒரே ஒரு நட்சத்திர வீரரை நம்பி இருக்கக்கூடாது - சரத் கமல்
தொடர்ச்சியாக சாம்பியன்களை உருவாக்க நமக்கு நிலையான ஒரு கட்டமைப்பு அவசியமாகும் என சரத் கமல் கூறியுள்ளார்.;
image courtesy: PTI
சென்னை,
இந்திய முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரரான சென்னையை சேர்ந்த சரத் கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது, டேபிள் டென்னிசில் ஒரே ஒரு நட்சத்திர வீரரை நம்பி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக சாம்பியன்களை உருவாக்க நமக்கு நிலையான ஒரு கட்டமைப்பு அவசியமாகும்.
நம்மிடம் நிறைய இளம் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் நாம் சரியான கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால், ஜூனியர் சாம்பியன், சீனியர் சாம்பியன்களாக உருவெடுப்பதை பார்க்க முடியாது என சரத் கமல் கூறினார்.